‘வீட்டை காலி பண்ணுங்க இல்ல வாடகையை குடுங்க’!.. அரிவாள் எடுத்து ‘ஹவுஸ் ஓனரை’ அதிரவைத்த பெண்.. பரபரப்பு வீடியோ..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Jun 05, 2020 09:24 AM

வாடகை கேட்ட வீட்டு உரிமையாளரை பெண் ஒருவர் கத்தியால் வெட்ட வந்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Woman threatened with knife the houseowner by asking for rent

கோயம்பத்தூர் ரத்தனபுரி அருகே கல்கி பகுதியை சேர்ந்தவர் மரிய பிரகாஷம். இவர் அப்பகுதியில் சில வீடுகளை வாடகைக்கு விட்டு வருகிறார். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் ஜெயா என்ற பெண் தனது குடும்பத்துடன் மரிய பிரகாஷம் வீட்டில் வாடகைக்கு குடியேறியுள்ளார். ஆரம்பத்தில் அட்வான்ஸ் 20,000 ரூபாயும், வாடகை 5,500 ரூபாயுமாக பேசப்பட்டுள்ளது.

ஆனால் ஜெயா அட்வான்ஸ் தொகையை முழுமையாக கொடுக்காமல் 10,000 ரூபாய் மட்டுமே கொடுத்ததாக சொல்லப்படுகிறது. இதனை அடுத்து தனக்கு வீடு பிடிக்கவில்லை என்றும், அதனால் வீட்டை காலி பண்ணப்போவதாகவும் மரிய பிரகாஷிடம் ஜெயா கூறியுள்ளார். அதனால் அட்வான்ஸ் தொகையை கொடுக்க முடியாது எனக் கூறி வீட்டை காலி செய்ய இரண்டு மாதங்கள் அவகாசம் கேட்டுள்ளார்.

இதற்கிடையில் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், ஜெயாவால் வீட்டை காலி பண்ண முடியாத சூழல் ஏற்பட்டது. இதனை அடுத்து வீட்டின் உரிமையாளர் மரிய பிரகாஷம் ஜெயாவிடன் வீட்டு வாடகை கேட்டு அடிக்கடி சென்றுள்ளார். அதேபோல் சம்பவத்தன்று வாடகை கேட்க சென்ற மரிய பிரகாஷம், ‘ஒன்னு வாடகையை குடுங்க இல்ல வீட்டை காலி பண்ணுங்க’ என கூறியுள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த ஜெயா, வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து மரிய பிரகாஷை மிரட்டியுள்ளார். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த நிலையில் இந்த வீடியோவின் அடிப்படையில் ஜெயாவின் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. வீட்டு வாடகை கேட்ட உரிமையாளரை பெண் ஒருவர் கத்தியால் வெட்ட வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Woman threatened with knife the houseowner by asking for rent | Tamil Nadu News.