'இந்த' மாநிலத்துல தான் 'உயிரிழப்பு' அதிகம்... ஒழுங்கா 'ஒத்துழைப்பு' குடுக்கல... 'பகீர்' குற்றச்சாட்டு!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேற்குவங்க மாநிலத்தில் தான் அதிகம் என மத்திய குழு குற்றஞ்சாட்டியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மூன்றாம் கட்டமாக ஊரடங்கு மே மாதம் 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா வைரஸ் தொற்று மூலம் இந்தியா முழுவதும் சுமார் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் 11 ஆயிரம் பேர் வரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், இந்தியாவில் அதிகம் பாதித்த பகுதிகளில் உள்துறை அமைச்சக குழு சென்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது. மேற்கு வங்க மாநிலம் சென்ற மத்திய குழு அந்த மாநில அரசு சோதனை மேற்கொள்ள முழு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என குற்றஞ்சாட்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் மத்தியக் குழுவின் அறிக்கையில், 'மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனா வைரஸ் மூலம் இறப்பு விகிதம் 12.8 % ஆகும். குறைந்த சோதனை மற்றும் பலவீனமான கண்காணிப்புகள் காரணமாக நாட்டில் அதிக இறப்பு சதவீதம் மேற்கு வங்க மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. கட்டுப்பாடு மண்டலங்களில் தனி நபர்களை தினசரி கண்காணிப்பதாக மேற்கு வங்கம் கூறிய போதும் அதற்கான எந்த ஆதாரமும் இல்லை' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
