கொரோனா 'டச்' செய்யாத "15 நாடுகள்"... 'உலகமே' திணறிக் கொண்டிருக்க... 'அந்த' நாடுகளில் நிகழ்ந்தது என்ன?
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் பெரும்பாலான உலக நாடுகளை கடுமையாக அச்சுறுத்தியுள்ளது. நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை உலகம் முழுவதும் அதிகரித்து வந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், அண்டார்டிகா, வடகொரியா, துர்க்மெனிஸ்தான் உள்ளிட்ட 15 நாடுகளில் யாருக்கும் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை. சீனாவின் அண்டை நாடான வடகொரியா, பொதுவாக மற்ற நாடுகளிடம் இருந்து தனித்து நிற்கும் நிலையில் ஜனவரி மாதமே சீன எல்லையை மூடியது. வெளிநாட்டினர்களின் வருகைக்கும் தடை விதித்தது. இருந்த போதும் வடகொரியாவின் நடவடிக்கைகள் மீது சந்தேகங்கள் இருப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன.
அதே போல துர்க்மெனிஸ்தான் நாடும் மார்ச் மாத தொடக்கத்தில் தங்களது எல்லைப்பகுதிகளை மூடியது. சீனாவில் இருந்து வரும் விமானங்களை பிப்ரவரி மாதமே ரத்து செய்தது. துர்க்மெனிஸ்தான் அரசும் பல்வேறு கட்டுப்பாடுகளை மக்களுக்கு விதித்தது. தஜிகிஸ்தான் நாட்டில் சமீபத்தில் சில மரணங்கள் ஏற்பட்டிருந்த நிலையில் இவையனைத்தும் நிம்மோனியாவால் ஏற்பட்ட மரணம் என அந்நாட்டு அரசு கூறியிருப்பது சில கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள லெசோத்தோ, காமரோஸ் போன்ற நாடுகளில் கொரோனா பாதிப்பு பதிவு செய்யப்படாத போதும் அதன் அருகிலிலுள்ள நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது. சாலமன் கடல் தீவு பகுதியில் மார்ச் 25 - ம் தேதி முதல் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டது.
டோங்கா, வனவட்டு தீவுகள் மார்ச் மாதம் முதலே கொரோனா பாதித்த நாடுகளில் இருந்து வான்வழி மற்றும் கடல் வழியாக மக்கள் வர தடை விதித்தன. சமோவா, பாலாவ், துவாலு, நவ்ரு, கிரிபதி, மார்ஷல், மிக்ரோனேசியா போன்ற தீவுகளும் வெளிநாட்டு பயணிகளுக்கு தடை விதித்ததால் வைரஸ் அத்தீவுகளிலும் பரவவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.