குணமடைந்த '1 லட்சம்' பேர்... பக்கத்து 'நாடுகளில்' கொரோனா 'சுழன்றடிக்க'... "அதிரடி" நடவடிக்கைகளால் வேகமாக 'மீண்டு' வரும் நாடு!
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் இன்று உலக நாடுகள் அனைத்தையும் கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதிலும் 27 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா வைரஸ் தொற்று மூலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சுமார் இரண்டு பேர் லட்சம் பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

சீனாவை விட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தி நாள்தோறும் ஆயிரக்கணக்கான உயிர் பலிகளை வாங்கி வருகிறது. உலகளவில் அமெரிக்காவில் அதிக உயிர் பலி ஏற்பட்டுள்ள நிலையில் அதற்கு அடுத்தபடியாக ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகள் உள்ளன.
ஆனால் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜெர்மனி மிக வேகமாக கொரோனா வைரஸில் இருந்து மீண்டு வருகிறது. கொரோனா வைரஸ் பரவிய தொடக்க நிலையிலேயே ஜெர்மனியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. சமூக இடைவெளியை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் என அரசு, மக்களுக்கு உத்தரவிட்ட நிலையில் வணிக வளாகங்கள், திரையரங்குகள் என அனைத்தையும் மூடின.
கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் செல்போனில் ஒரு செயலியின் மூலம் ஜிபிஎஸ் தொழில்நுட்ப உதவியுடன் அவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இவையனைத்தையும் விட வைரஸ் பரிசோதனை அதிக அளவில் நடத்தப்பட்டு சிறப்பான முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்து வருகின்றனர். இருபது லட்சத்திற்கும் மேற்பட்டோர் வரை கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டது உறுதியானது.
இதில் தற்போது 43 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதமுள்ள ஒரு சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஜெர்மனியில் இதுவரை சுமார் ஐயாயிரம் பேர் வரை கொரோனா வைரசிற்கு உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
