"அட கொடுமையே"... தொடர்ந்து 'ஆறு' நாட்களாக 10,000 தொட்ட பாதிப்பு எண்ணிக்கை... 'ராக்கெட்' வேகத்தில் உயரும் அபாயம்!
முகப்பு > செய்திகள் > உலகம்உலக நாடுகள் அனைத்தையும் கொரோனா வைரஸ் கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. இதுவரை உலகளவில் கொரோனா வைரஸ் மூலம் பாத்திக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாற்பது லட்சத்தை நெருங்கும் நிலையில் சுமார் 2.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வரை உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், ரஷ்ய நாட்டில் ஆரம்பத்தில் வைரஸ் கட்டிற்குள் இருந்த நிலையில், தற்போது அதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 10,669 பேர் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஆறு நாட்களாக தினமும் தொடர்ந்து ரஷ்யாவில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதுவரை ரஷ்யாவில் 1,87 ,859 பேர் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 1700 பேர் வரை உயிரிழந்துள்ளனர். மேலும், சுமார் 21 ஆயிரம் பேர் வரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா வைரஸ் காரணமாக எண்ணெய் மதிப்பு சரிந்துள்ள நிலையில் ரஷ்யா கடும் பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கரோனா வைரஸ் காரணமாக எண்ணெய் மதிப்பு சரிந்துள்ள நிலையில் ரஷ்யா கடும் பொருளாதாரா நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.
