'குணமடைந்து' வீடு திரும்பியவர்களுக்கு... 'அறுபது' நாட்கள் கழித்து காத்திருந்த அதிர்ச்சி... "சீனால என்ன தான் நடக்குது?"...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith | Apr 23, 2020 07:21 AM

சீனாவில் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டு குணமடைந்த நபர்கள் பலருக்கு அறுபது நாட்கள் கழித்து மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Shocking incident in China for recovered patients

சீனாவில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் இன்று அனைத்து உலக நாடுகளையும் கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. தற்போது சீனா இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில், முன்னதாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு குணமடைந்த நபர்களுக்கு சுமார் அறுபது நாட்கள் கழித்து தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. அதில் பலருக்கு கொரோனா குறித்து அறிகுறி எதுவும் இல்லாதது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மிகப்பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது  குறித்த விவரங்களை சீன அரசு முழுவதுமாக வெளியிடவில்லை. குணமடைந்து வீடு திரும்புபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டால் போதும் என அனைத்து உலக நாடுகளும் அறிவுறுத்தி வரும் நிலையில் அறுபது நாட்கள் கழித்து வைரஸ் தொற்று ஏற்படுத்துவது பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

குணமடைந்தவர்களின் உடல் பாகங்களில் கொரோனா வைரஸ் தங்கியிருக்க கூடும் என்பதால் மீண்டும் அவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது எனவும் தென்கொரிய வல்லுநர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.