'அமெரிக்காவில் ஐஃபோன் கடைகள் சூறை...' "நீங்களே திருப்பி குடுத்திருங்க..." "இல்லன்னா?..." 'திருடர்களுக்கு' ஆப்பிள் நிர்வாகம் 'எச்சரிக்கை...'
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் ஜார்ஜ்பிளாய்ட் படுகொலைக்கு எதிராக நடக்கும் போராட்டத்தின் போது பலர் ஆப்பிள் நிறுவனக் கடைகளை சூறையாடியதால் ஐபோன்கள் பல திருடு போயுள்ளன. இந்நிகழ்வுக்கு ஆப்பிள் நிறுவனம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மின்னிசோட்டா மாகாணத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ப்ளாயிட் படுகொலை பிற மாகாணங்களுக்கும் பரவி தற்போது பெரிய போராட்டமாக வெடித்துள்ளது. இந்த சூழலை பயன்படுத்தி சில வன்முறையாளர்கள அமெரிக்காவில் பல கடைகளை சூறையாடி வருகின்றனர்.
பிலடல்ஃபியா மாகாணத்தில் கொரோனா ஊரடங்கை அடுத்து ஆப்பிள் நிறவனத்தின் கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், இங்கு சில வன்முறையாளர்கள் புகுந்து ஐபோன்களை திருடிச் சென்றுள்ளனர்.
ஐபோன்கள் திருடப்பட்டதை அடுத்து ஆப்பிள் நிர்வாகம் சார்பில் ஒரு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதில், 'திருடப்பட்ட ஐபோன்கள் இயங்காதபடி செய்யமுடியும் என்றும், ஐபோன்களைத் திருடியவர்களை அதில் உள்ள மென்பொருள் உதவியுடன் கையும் களவுமாக காவலர்களால் பிடிக்கவும் முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், 'திருடியவர்கள் அவர்களாகவே முன்வந்து போன்களை திருப்பி அளிப்பது நல்லது' என்றும் ஆப்பிள் நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் வைரலாகியது.

மற்ற செய்திகள்
