VIDEO : மலைப்பாம்பின் பிடியில் இறுகிய 'மான்'... 'இறுதியில்' நடந்த 'ட்விஸ்ட்'... அந்த என்ட்ரி தான் 'சிறப்பு'!
முகப்பு > செய்திகள் > உலகம்காட்டுப்பகுதிகளில் விலங்குகள் தங்களது இரைகளுக்கு வேண்டி வேட்டையாடும் வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வரும்.

இந்நிலையில், துள்ளிக் குதிக்கும் புள்ளி மான் ஒன்றை மலைப்பாம்பு தனது பிடியில் இறுக்கி வைத்து கொள்ளும் வீடியோ ஒன்று தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. மலைப்பாம்பின் பிடியில் இருந்து மானும் தப்பித்துக் கொள்ள முயற்சி செய்த நிலையில், மூன்றாவதாக மனிதர் ஒருவர் என்ட்ரி குடுத்து மானை காப்பாற்றியுள்ளார்.
காரில் இருந்து எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், மிக தடிமனான மலைப்பாம்பு ஒன்று இளமானை தனது பிடியில் இறுக்கி வைத்துக் கொள்கிறது. கிட்டத்தட்ட தனது இரையை மலைப்பாம்பு தயாராக்கிக் கொண்டிருந்த நிலையில், மனிதர் ஒருவர் ஒரு குச்சியை எடுத்து அதனை உசுப்ப தனது பிடியை தளர்த்த, இது தான் தருணம் என மானும் தப்பித்து குதித்து ஒரு திசையில் ஓட, மறுதிசையில் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் மலைப்பாம்பும் சிதறி ஓடியது.
เหตุเกิดเมื่อวานนี้ ณ สวนสัตว์เปิดเขาเขียว pic.twitter.com/btHDDlDkXh
— Visit Arsaithamkul (@papakrab) May 30, 2020

மற்ற செய்திகள்
