தமிழகத்தில் அதிரவைத்த 'கொரோனா' பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை... 'ஒரே' நாளில் '12 பேர்' பலி... முழு விவரம் உள்ளே!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,373 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ஒரே நாளில் ஏற்பட்ட அதிக பாதிப்பாக இது பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்த அறிவிப்புகள் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று வெளியான தகவலில் இன்று மட்டும் தமிழகத்தில் 1,373 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. இதில், சென்னையில் மட்டும் இன்று கொரோனாவால் 1,072 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக கொரோனா தொற்று மூலம் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,256 ஆக உயர்ந்துள்ளது.
இதனை பாலின ரீதியாக பகுப்பாய்வு செய்ததில் 16,964 ஆண்களும், 10,278 பெண்களும், 14 திருநங்கைகளும் பாதிக்கப்பட்டிருப்பதாக அறியப்பட்டுள்ளது. இன்று இந்த கொடிய வைரசிற்கு தமிழகத்தில் 12 பேர் பலியான நிலையில், தமிழகத்தில் இதுவரை இந்த வைரசிற்கு பலியானோர் எண்ணிக்கை 220 ஆக உயர்ந்துள்ளது. இன்று 585 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 14 ,901 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 12,132 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் தற்போதுவரை 5,44,981 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
