இன்று 'ஒரேநாளில்' மட்டும் '841' பேர்... 15 ஆயிரத்தை கடந்தது 'பாதிப்பு' எண்ணிக்கை!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith | May 05, 2020 11:20 PM

இந்தியாவில் கொரோனா வைரஸ் மூலம் அதிகம் பேர் பாதித்த மாநிலமான மகாராஷ்டிராவில் இன்று மட்டும் 841 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

15 thousand people get affected from Corona Virus

இந்தியாவில் இன்று வரை சுமார் 46 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மகாராஷ்டிரா மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்ற மாநிலங்களை விட பல மடங்கு அதிகமாக உள்ளது. இன்று புதிதாக பாதிக்கப்பட்ட 841 பேரில் மும்பை பகுதியில் மட்டும் 635 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதே போல மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 34 பேரில் பலியான நிலையில் அதில் 26 பேர் மும்பை பகுதியை சேர்ந்தவர்களாவர். தமிழகத்தில் இன்று மட்டும் சுமார் 500 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.