'வைரஸ்களை' அழிக்கும் 'செம்பு' பாத்திரங்கள்... 'கொரோனா' வைரஸை ஒழிக்கும் 'ஆயுதம்?...' 'ஆய்வாளர்கள்' அறிவுறுத்தல்...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Mar 23, 2020 01:08 PM

கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து விடுபட செம்பு (காப்பர்) பாத்திரங்களை பயன்படுத்துமாறு ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Copper utensils that kill the microbes-Analysts interpret

உலக நாடுகளில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வரும் நிலையில், உடனிருப்பவர்களையும், சுற்றுப்புறத்தில் உள்ள பொருட்களையும் தொடுவதற்கே நமக்கு அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.

நாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் வாட்டர் கேன், சமையல் பாத்திரங்கள், போன்றவற்றை நாம் அடிக்கடி கழுவி உபயோகப்படுத்தினாலும், இதுபோன்ற உலோகங்களில் இந்த வைரஸ்கள் நீண்ட நேரம் உயிருடன் இருக்கும் என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதுபோன்ற நேரங்களில் கிருமிகளின் தொற்று இல்லாத உலோகம் குறித்து ஆய்வாளர்கள் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அது வேறொன்றும் இல்லை, நம் முன்னோர்கள் பயன்படுத்திய செம்பு பாத்திரங்கள் தான்.

பல ஆண்டுகளாகவே நமது முன்னோர்கள் செம்பின் மகத்துவம் அறிந்தவர்களாக இருந்துள்ளனர். அதன் காரணமாகவே செம்பு பாத்திரங்களில் சேமித்து வைத்த தண்ணீரை அருந்தி வந்துள்ளனர். தற்போதும் கூட சிலர் செம்பு பாத்திரங்களில் தண்ணீர் குடிப்பதை காண முடியும். பாக்டீரியா மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பலன்களை அளிக்கக்கூடியதாக செம்பு இருப்பதே இதற்கு காரணமாகும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் சக்தி அந்த தண்ணீருக்கு உள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனா மட்டுமில்லை, எந்த ஒரு வைரஸும் இந்த தனிமத்தின் மீது பட்டால், அது சில நிமிடங்களிலேயே அழிந்துவிடும். அதுபோன்ற வல்லமை படைத்த உலோகம் தான் காப்பர் எனப்படும் செம்பு.

2015ம் ஆண்டு சவுத்தாம்டன் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், SARS, MERS போன்ற சுவாச குழாய் பகுதியில் பரவும் வைரஸை தடுப்பதில் செம்பு முக்கிய பங்காற்றுவதாக கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேரிலேண்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ரீதா கார்வெல் என்பவர் அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் மைக்ரோ பயாலஜி எனும் ஆராய்ச்சி பக்கத்தில் வெளியிட்டிருந்த ஆராய்ச்சி கட்டுரையில், கொரோனா  வகையைச் சேர்நத் வைரஸ்களின் தாக்கம் செம்பு அல்லாத பிற பரப்புகளில் பிழைத்து செழித்து வளர்ந்தது என்றும், செம்பின் மீது வைரஸின்  மரபணுக்கள் அழிந்ததாகவும், கண்டறியப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

1980களுக்கு முன்னதாக மருத்துவமனைகளில் செம்பு பாத்திரங்கள் பயன்படுத்தப்பட்டது. அது சிறந்த கிருமிநாசினியாக செயல்பட்டது. ஆனால் 1980க்கு பின்னதாக ஸ்டீல், பித்தளை போன்ற பொருட்களின் பயன்பாடு அதிகரித்துவிட்டது.

Tags : #CORONA #COPPER #UTENSILS #MICROBES #ANALYSTS