VIDEO: ‘கொரோனா அறிகுறி’.. ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்ட பெண்.. திடீரென செய்த காரியம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா அறிகுறியுடன் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்ட பெண் தடையை மீறி நீச்சல் குளத்தில் குளித்ததை அடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

ஸ்பெயின் நாட்டின் கேனரி தீவில் உள்ள டெனஃரீப் என்ற இடத்தில் உள்ள ஹோட்டலில் கொரோனா அறிகுறியுடன் பிரிட்டன் பெண் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டார். பலத்த பாதுகாப்புடன் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், திடீரென தடையை மீறி அங்குள்ள நீச்சல் குளத்தில் இறங்கி அவர் குளிக்க ஆரம்பித்தார். இதனால் மற்ற சுற்றுலா பயணிகள் குளத்தில் இறங்க பயந்து கரையில் நின்றனர்.
இதனையறிந்த போலீசார் உடனே நீச்சல் குளத்துக்கு வந்த அப்பெண்ணை வெளியேறுமாறு அறிவுறுத்தினர். ஆனால் அப்பெண் அதனை பொருட்படுத்தாமல் குளித்துக்கொண்டே இருந்தார். இதனால் கோபமடைந்த காவல்துறை அதிகாரி ஒருவர், நீச்சல் குளத்தில் இறங்கி வழுக்கட்டாயமாக அப்பெண்ணை வெளியேற்றி கைது செய்தார். இதை அங்கு இருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
