இந்த மருந்துதான் 'கொரோனாவை' கட்டுப்படுத்துச்சு... '90 சதவீதம்' பேர் உயிர் 'பிழைச்சுட்டாங்க'... 'ஜப்பான்' மருந்து கம்பெனியை பாராட்டும் 'சீனா'...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Mar 19, 2020 12:53 PM

சீனாவின் வூகானில் கட்டுக்கடங்காமல் பரவிய கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் ஜப்பானின் மருந்து பெரும்பங்கு வகித்ததாக சீனா அறிவித்துள்ளது.

Japanese drug favipiravir proving effective against Corona

சீனாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவிய நிலையில், அதை அந்நாடு கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது. சீனாவில் நேற்று எந்த பாதிப்பும் பதிவாக வில்லை.

இந்நிலையில், கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு, ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஃபாபிபிராவிர் (Fabipiravir) என்ற மருந்து பெரும் பங்கு வகித்ததாக சீனா அறிவித்துள்ளது.

அவிகன் எனப்படும் இந்த மருந்து  ஆர்.என்.ஏ வைரஸ்களை எதிர்த்துப் போராடுவதற்காக உருவாக்கப்பட்ட ஃபாவிபிராவிர்  இன்ஃப்ளூயன்ஸா மருந்தின் பிராண்ட் பெயர் ஆகும் . இதை 2014 இல் பியுஜி பிலிம் டோயாமா கெமிக்கல் உருவாக்கி உள்ளது.

இந்த மருந்தால் வூகானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 340 பேர் குணமடைந்திருப்பதாக சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கொரானோவால் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டவர்களில்  ஃபாபிபிராவிர்   மருந்து கொடுக்கப்பட்ட 90 சதவீதம் பேருக்கு உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து திறம்பட செயல்படுவதாக சீனாவின் உயிரி தொழில்நுட்ப மேம்பாட்டு மையத்தின் இயக்குனர் ஜாங் சின்மின் தெரிவித்துள்ளார்.

Tags : #CORONA #MEDICINE #JAPAN #CHINA