‘மூடப்படும் எல்லைகள் .. சென்னை உட்பட 3 மாவட்டங்களுக்கு லாக்டவுன்’.. 'ஊரடங்கு உத்தரவை மீறினா கடுமையான ஆக்ஷன்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 415ஆக உயர்வு

இந்த நிலையில் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்திய சிலர் வீட்டில் இருக்காமல் வெளியே சென்று வருவதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதோடு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பயணிகள் அரசின் அறிவுரையை மீறி வெளியே நடமாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே லாக்டவுன் முறை சென்னை, காஞ்சிபுரம் , ஈரோடு உள்ளிட்ட 3 மாவட்டங்களில் கொண்டுவரப்படும் சூழலில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அத்தியாவசிய கடைகளை தவிர பிற கடைகளை மூடுமாறு அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னை, ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
காஞ்சிபுரம், சென்னையை பொருத்தவரை வெளிப்பயணங்களுக்கு சென்று வந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில் ஊரடங்கை கடுமையாக்கவும் மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் பிரதமர் மோடியின் உத்தரவுப்படி சென்னை மட்டும் முழுமையான லாக்டவுனுக்கு சற்று நேரத்தில் கொண்டுவரப்படலாம் என தெரிகிறது.
