'தமிழகத்தில் மீண்டும் கொரோனா வைரஸ்...' 'மூன்றாவது நபருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது...' அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டரில் அறிவிப்பு...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Mar 19, 2020 04:37 PM

அயர்லாந்திலிருந்து சென்னை வந்த 21 வயதுடைய இளைஞருக்கு கொரோனா வைரஸ் உறுதி படுத்தப்பட்ட அறிவிப்பு மேலும் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

The third person in Tamil Nadu is confirmed to have coronavirus

கொரோனா வைரஸ் சீனாவிலிருந்து பரவி தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது. இந்த வைரஸ் பரவுவதை WHO அமைப்பு 4 கட்டங்களாக பிரிந்த நிலையில் இந்தியா தற்போது மூன்றாம் படிநிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோவிட் 19 என்னும் கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் இருக்க இந்திய அரசு பல்வேறு பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் 17.03.2020 அன்று விமானம் மூலம் அயர்லாந்திலிருந்து சென்னை திரும்பிய 21 வயதுடைய இளைஞருக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருக்கிறது என சந்தேகம் அடைந்த  மருத்துவ குழுவினர் அவரை தனிமையை படுத்தியுள்ளனர் .

அவருடைய இரத்த சளி ஆகியவை பரிசோதனைக்கு அனுப்பி வைக்கபட்டுள்ளது. தற்போது மருத்துவக்குழுவின் அறிக்கை படி அந்த இளைஞருக்கு கொரோனா வைரஸ் இருக்கிறது என தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகி உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 2 ஆக இருந்த பாதிப்பு எண்ணிக்கை தற்போது 3 ஆக உயர்ந்துள்ளது.

 

Tags : #CORONA