'சீனாவை' விட்டு விட்டு 'இத்தாலியை' பற்றிக் கொண்ட 'கொரோனா'... ஒரே நாளில் '475 பேர்' பலி... 'பலி' எண்ணிக்கை '2,978' ஆக 'உயர்வு'...
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இத்தாலியில் ஒரே நாளில் 475 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து அங்கு பலியானோர் எண்ணிக்கை 2978 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவில் உருவாகி 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் கோரத்தாண்டவம் ஆடிவரும் கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.
சீனாவை தொடர்ந்து கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளாக இத்தாலியும்,ஈரானும் உள்ளது. இதில் இத்தாலியில் ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்பால் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றனர்.
இத்தாலி நாட்டில் நேற்று ஒரே நாளில் 475 பேர் பலியாகி விட்டனர். இதன்மூலம் அங்கு பலி எணணிக்கை 2,978 ஆக அதிகரித்து இருக்கிறது. 35,713 பேர் வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா தாக்குதலுக்கு ஒரே நாளில் 475 பேர் பலியானது இத்தாலியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags : #CORONA #ITALY #475 DIED #ONE DAY
