'கொரோனாவுக்கெல்லாம்' தாத்தா 'ஸ்பானிஷ் ஃபுளூ'... அந்த காலத்தில் 'கோடிக்கணக்கில்' இறந்திருக்கிறார்கள்... அதையே இந்த உலகம் 'சாமாளித்து' விட்டது...
முகப்பு > செய்திகள் > உலகம்பேர்டு புளூ என்னும் பறவைக்காய்ச்சலை பற்றி நம்மில் பலரும் அறிந்திருக்கிறோம். ஸ்வைன் புளூ என்று அழைக்கப்படுகிற பன்றிக்காய்ச்சல் பற்றியும் நமக்கு தெரியும். ஆனால் இன்புளூவென்சா தொற்று நோய் என்று அழைக்கப்படக்கூடிய ஸ்பானிஷ் காய்ச்சல் காய்ச்சல் பற்றி பலருக்கும் தெரியாது.

100 ஆண்டுகளுக்கு முன்னர் முதலாம் உலகப் போரின் போது இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த ஸ்பானிஷ் ஃபுளூவுக்கு உலகம் முழுவதும் பலியானவர்களின் எண்ணிக்கை கோடிகளைத் தாண்டும்.
இந்தியாவில் மட்டும் பல லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்த காலத்தைப் போல் அப்போது ஊடகங்கள் இல்லாததால் இதன் உண்மை நிலவரம் மக்களைப் போய் சேராமலேயே போய்விட்டது.
இன்றைய அமெரிக்க அதிர் டொனால்டு டிரம்பின் தாத்தா இந்த நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார் என்ற தகவலும் உள்ளது. ஸ்பானிஷ் புளூ என்ற பெயரை வைத்து இது ஸ்பெயினில் தோன்றி பரவயிது என பலரும் நினைக்கலாம். ஆனால் இந்த நோய் ஸ்பெயினில் தொற்றுவதற்குள், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் பரவி விட்டது. அதன்பின்னர்தான் ஸ்பெயினில் பரவி இருக்கிறது.
ஸ்பெயின் அரசு, உலகப்போரின்போது நடுநிலை வகித்ததால் இந்த நோய் பற்றிய தகவல்களை உள்ளபடியே ஊடகங்களில் வெளியிட்டு உலகத்துக்கு அம்பலப்படுத்தியது. அதனால்தான் இன்றளவும் அது ஸ்பானிஷ் ஃபுளூ என்று அழைக்கப்பட்டு வருகிறது.
ஸ்பானிஷ் ஃபுளூ தாக்கியவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பாற்றல் சிஸ்டம் அதீத எதிர்வினை புரிவதால் உயிரிழப்பை ஏற்படுத்துகிறது. அதனால் நல்ல நோய் எதிர்ப்புச்சக்தி கொண்ட இளைஞர்களை இந்த நோய் கொன்று குவித்திருக்கிறது. அதே நேரத்தில் வயதானவர்கள், குழந்தைகள் பெரிய அளவில் அப்போது பாதிக்கப்படாமல் தப்பித்திருக்கிறார்கள்.
அப்போதைய பம்பாய் மாகாணம் வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவிய இந்த காய்ச்சல், இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடியுள்ளது. 2012-ல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், இந்தியாவில் 1 கோடியே 40 லட்சம் பேர் இறந்ததாக கூறப்படுகிறது..
எனவே ஸ்பானிஷ் புளூ காய்ச்சலுடன் ஒப்பிட்டால் இந்த கொரோனா வைரஸ் நோய் ஒன்றுமே இல்லை. தகுந்த முன் எச்சரிக்கையுடன் செயல்பட்டால், நாம் இந்த கொரோனா ஆபத்தில் இருந்து எளிதாக கடந்து வந்து விடலாம்.
