'கொரோனா வைரஸ் காற்றில் பரவாது'... 'மருத்துவர்கள்' வெளியிட்ட 'ஆறுதலான' தகவல்... இந்திய 'மருத்துவ' ஆராய்ச்சி 'கவுன்சில்' 'அதிகாரப்பூர்வ' அறிவிப்பு...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Suriyaraj | Mar 23, 2020 10:49 AM

கொரோனா வைரஸ் காற்றில் பரவாது, ஒருவர் தும்மும் போது அவரிடமிருந்து வெளியேறும் நீர்த்துளிகள் வாயிலாக மட்டுமே பரவும்' என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

Coronavirus does not spread in the air-Indian Medical Council

இதுகுறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குனர் பால்ராம் பார்கவா கூறியதாவது: "கொரோனா வைரஸ் காற்றில் பரவாது; ஒருவரிடமிருந்து வெளியேறும் நீர்த்துளிகள் வாயிலாக மட்டுமே பரவும். இந்தியாவில் இதுவரை 17 ஆயிரம் பேரின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளன. தினமும் 10 ஆயிரம் பேர் என, வாரத்திற்கு 70 ஆயிரம் பேரின் ரத்த மாதிரிகளை எடுத்து கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தும் திறன் நம்மிடம் உள்ளது." எனக் கூறினார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 5 சதவீதம் பேருக்கு சிறப்பான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும், நோயாளிகளின் உடல் நிலைக்கு ஏற்பட சில நேரங்களில் புதிய மருந்துகளும் வழங்கப்படுவதாக அவர் கூறினார். நோய் பரவும் சங்கிலியை உடைக்க வெளிநாட்டில் இருந்து வரும் மக்களை தனிமைப்படுத்தி சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Tags : #CORONA #INDIAN MEDICAL COUNCIL #SNEEZING #SPREAD