’கொரோனாவை’ வில்லனாக பாவித்து...’ ’தெறிக்கவிடும்’ ’பாடல்களுடன்’... ’கேரளா’ வெளியிட்ட ’விழிப்புணர்வு வீடியோ’...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | Mar 22, 2020 12:14 AM

கொரோனாவை எதிர்கொள்வது தொடர்பாக கேரளா காவல்துறை வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

Kerala police released a different kind of awareness video

கேரளாவில் கொரோனா வைரஸ் காரணமாக 44390 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 44165 வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டும், 225 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் உள்ளனர். கேரள முதல்வர் பினராயி விஜயன் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு ஆலோசனைகள் நடத்தி வருகிறார்.

கேரளாவில் கொரோனா தொற்று அதிகரிக்க இருக்காமல் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் வருகின்றன. இந்நிலையில் கேரள காவல்துறை விழிப்புணர்வு வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவில், “இளைஞர் ஒருவரை கொரோனா வைரஸ் துரத்துவதால் பயந்து தலைதெறிக்க ஓடுகிறார்.  ஒருகட்டத்தில் ஒடுவதை நிறுத்திவிட்டு அதை எதிர்த்து தைரியமாக நிற்கிறார். அப்போது அவருக்கு பின்னால் போலீஸார் ஒருவரும் டாக்டர் ஒருவரும் உடன் உள்ளனர். பேக்ரவுண்டில் தெறிக்க விடும் பாடல் ஒன்று பாட, சிரித்தபடியே தனது மீசையை அழுத்தி முறுக்குகிறார். பிறகு டாக்டரிடமிருந்து சானிடைசரை வாங்கி தனது கைகளை நன்கு சுத்தப்படுத்துகிறார். பின்னர் காவலரிடமிருந்து மாஸ்க் ஒன்றை வாங்கி அணிந்து கொள்கிறார். அதன் பிறகு கொரோனாவை பார்த்து 'இப்ப வாடா' என்று தைரியமாக சொல்ல, கொரோனா வைரஸ் தெறித்து ஓடி மறைகிறது“.

 

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags : #CORONA #KERALA #POLICE DEPARTMENT #AWARENESS VIDEO