"அடுத்த மாதத்தை நினைத்தால் கவலையளிக்கிறது..." முதலில் இப்படித்தான் 'மெதுவாக' 'பரவும்'... 'அமைச்சர்' வெளியிட்ட 'அதிர்ச்சி தகவல்'...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | Mar 20, 2020 09:03 AM

கொரோனா வைரஸ் அடுத்த மாதத்திலிருந்து அதிகம் பரவ வாய்ப்புள்ளதாக மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார்.

Shock information released by minister on spread of corona

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் தற்போது பரவ ஆரம்பித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை மஹாராஷ்ட்ராவில்  தான் அதிக அளவில் கொரோனா வைரஸ் தாக்கம் உள்ளது.

இந்தநிலையில் மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே அடுத்த மாதத்திலிருந்து வைரஸின் தாக்கம் அதிக அளவில் இருக்கும் என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.

மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா வைரஸ் நோயை பொருத்தவரை ஆரம்பத்தில் குறைவான அளவிலேயே பாதிப்பு காணப்படுகிறது. ஆனால் சில வாரங்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிரடியாக அதிகரிப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது எனக் குறிப்பிட்டார்.

அடுத்த மாதம் நிலைமையை நினைக்கும்போது கவலை அளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், பிற நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் மீட்டு வரப்படும் பொழுது நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனக் குறிப்பிட்டார்.

தற்போது வெளிநாட்டினர் மூலமாக மட்டுமே இந்த வைரஸ் பரவி வரும் நிலையில், வரும் காலத்தில் உள்நாட்டை சேர்ந்தவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவும் நிலைக்கு  சென்றுவிட்டால் நிலைமை மோசமாகி விடும் எனக் குறிப்பிட்டார். இந்த நிலைக்கு மஹாராஷ்ட்ரா செல்வதைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். தேவைப்பட்டால் மும்பை உள்ளிட்ட முக்கிய நகர எல்லைகளை மூடவும் அரசு நடவடிக்கை எடுக்கும் என அவர் குறிப்பிட்டார்.

Tags : #CORONA #MAHARASHTRA #MUMBAI #MINISTER #SHOCKING INFORMATION