என்ன ஒரு 'தீர்க்கதரிசனம்.!..' 'இன்னைக்கு' நடக்கிறத 'அப்படியே' எடுத்திருக்காரு...'ஹாலிவுட்டில்' ஒரு 'நாஸ்ட்ரடேமஸ்'...
முகப்பு > செய்திகள் > உலகம்தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் குறித்து 2011ம் ஆண்டிலேயே அப்படியே சொல்லியிருக்கிறது ஒரு திரைப்படம்.

சினிமாவில் காட்சியாக்கப்பட்ட கற்பனை நிகழ்வுகள், சில சமயங்களில் நிஜத்தில் அப்படியே நடந்து விடுவது உண்டு. அது போல் ஒரு திரைப்படம் தான் தற்போது நிஜமாகியுள்ளது. 2011ஆம் ஆண்டு வெளியான கண்டேஜியன் (Contagion)என்ற அந்த திரைப்படம் தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் மற்றும் அதன் பரவலை அப்போதே வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
ஸ்டீவன் சோடர்பெர்க் இயக்கத்தில் மரியான் கொடில்லார்ட், மேட் டேமன், க்வைனத் பால்ட்ரோ, ஜூட் லா, லாரன்ஸ் ஃபிஷ்பர்ன் உள்ளிட்ட பிரபல ஹாலிவுட் நட்சத்திரங்கள் பலர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படம் சீனாவில் மக்காவ் என்ற இடத்தில் வசிக்கும் ஒரு சமையல்காரர் ஒருவரிடம் இருந்து உலகம் முழுவதும் இந்த நோய் பரவுவதாக காட்சியமைக்கப்பட்டு இருக்கும். அதேபோல, கொரோனா வைரஸும் சீனாவிலிருந்தே உலகம் முழுவதும் பரவியது.
இந்தக் கிருமித் தொற்று பன்றி, வவ்வாலிலிருந்துதான் ஆரம்பித்துள்ளது என படத்தில் சொல்லிருப்பார்கள். அதேபோல கொரோனா வைரஸும் விலங்குகளிடமிருந்தே மனிதர்களுக்கு பரவியது.
இப்போது பல நாடுகளில் இருப்பதைப் போலவே, காலி வீதிகள், காலி விமான நிலையங்கள், நகரங்கள், தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை எடுக்கும் மக்கள் என பல விஷயங்கள் கன்டேஜியன் படத்திலும் தத்ரூபமாக காட்டப்பட்டிருக்கும். இந்தக் காரணங்களால், கண்டேஜியன் திரைப்படம் உலகம் முழுவதும் தற்போது அதிகம் தேடி பார்க்கும் திரைப்படமாக மாறியுள்ளது.
