'ரயிலில்' போலீசாரை பார்த்ததும் 'பதுங்கிய' இருவர்... 'கொரோனா' பாதிக்கப்பட்டவர்கள் என 'தெரிந்ததும்'... 'பதறிப்' போன 'பயணிகள்'...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | Mar 21, 2020 11:27 PM

கொரோனா அறிகுறிகளுடன் தனிமை முகாமில் பாதுகாக்கப்பட்டவர்களில் இருவர் தப்பிச் சென்ற நிலையில் அவர்களை போலீசார் துரத்தி பிடித்துள்ளனர்.

two corona suspected passengers from rajdhani express

கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதுவரை இந்தியாவில் 271 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு முகாமில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  ஆந்திராவில் 3 பேரும், தெலங்கானாவில் 19 பேரும் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலம் விகாராபாத் தனிமை முகாமில் அறிகுறிகளுடன் பலர் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த முகாமிலிருந்து இருவர் திடீரென தப்பிச் சென்றதாக தகவல் வெளியானது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் தேடுதல் வேட்டையில் தப்பிச் சென்ற இருவரும் ஆந்திராவின் காஜியாபாத் ரயில் நிலையத்தில் பிடிபட்டனர். அவர்கள் இருவரும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் மூலம் டெல்லி செல்ல திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது.

ரயில் நிலையத்தில் அவர்கள் இருவரும் பிடிபட்ட நிலையில், அங்கிருந்தவர்களிடம் பதற்றம் ஏற்பட்டது. இதனை அடுத்து, அவர்கள் பயணித்த பெட்டி மற்றும் ரயில் நிலையத்தின் பிற இடங்கள் மருந்து தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. இருவரும், ஆம்புலன்ஸ் மூலம் வாரங்காலில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

Tags : #CORONA #ANDRA #RAJTHANI EXPRESS #ESCAPED #POLICE ARREST #DELHI