ஒரே நாளில் இளம்பெண்ணுக்கு ‘கோடிகளில்’ கொட்டிய ‘அதிர்ஷ்டம்’... ஆச்சரியத்தில் உறைந்தவருக்கு ‘கடைசியில்’ காத்திருந்த ‘ட்விஸ்ட்’...
முகப்பு > செய்திகள் > உலகம்By Saranya | Dec 17, 2019 05:35 PM
வங்கியின் பிழையால் இளம்பெண் ஒருவரின் கணக்கிற்கு ஒரே நாளில் 37 மில்லியன் டாலர் பணம் டெபாசிட் ஆன சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்காவின் வடக்கு டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்தவர் ரூத் பலூன் (35). இவர் இந்த வார தொடக்கத்தில் தனது வங்கிக் கணக்கை சரிபார்த்து உள்ளார். அப்போது அவருடைய வங்கிக் கணக்கில் 37 மில்லியன் டாலர் பணம் டெபாசிட் ஆகியிருப்பதைப் பார்த்து ஆச்சரியத்தில் உறைந்து போயுள்ளார்.
கிறிஸ்துமஸ் பரிசாக தனக்கு அந்தப் பணம் வந்திருக்கலாம் என நினைத்த அவர் சந்தோஷத்தில் தன் கணவருக்கு ஃபோன் செய்து நடந்ததைக் கூறியுள்ளார். ஆனால் அந்த சந்தோஷம் அவருக்கு நீண்ட நேரம் நிலைக்கவில்லை. பிழையாக பணம் டெபாசிட் ஆனதை அறிந்த வங்கி அதற்கு மன்னிப்பு தெரிவித்து அந்தப் பணம் முழுவதையும் திரும்பப் பெற்றுக்கொண்டுள்ளது.
Tags : #MONEY #WOMAN #JACKPOT #BANK #ERROR #CHRISTMAS #MILLION
