‘நிற்க முடியாத அளவுக்கு கூட்டம்’!.. ‘மின்சார ரயிலில் இருந்து தவறி விழுந்த இளம்பெண்’!.. ஆபிஸ் போகும்போது நேர்ந்த சோகம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Dec 17, 2019 12:10 PM

மகாராஷ்டிராவில் ஓடும் ரயிலில் இருந்து இளம்பெண் தவறி விழுந்து உயிரிழந்தார்.

22 year old woman dies after falling off local train in Dombivli

மகாராஷ்டிராவில் உள்ள டோம்பிவ்லி பகுதியில் சார்மி பிரசாத் (22)  என்ற இளம்பெண் தாய் மற்றும் இரு சகோதரர்களுடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை வேலைக்கு செல்வதற்காக மின்சார ரயிலில் பயணம் செய்துள்ளார். அப்போது ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. அதனால் ரயிலின் படிக்கட்டில் நின்று பயணித்ததாக கூறப்படுகிறது.

அப்போது எதிர்பாராதவிதமாக ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்துள்ளார். இதில் அவரின் தலை மற்றும் முதுகுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.  உடனே அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துமனைக்கு அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து தெரிவித்த காவல் அதிகாரி ஒருவர், அப்பெண் பயணித்த பெட்டியில் கூட்டம் அதிகமாக இருந்ததால், சரியாக நிற்க முடியாமல் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இந்த ஆண்டில் மட்டும் இதேபோல் நான்கு விபத்துகள் நடந்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Tags : #TRAINACCIDENT #TRAIN #KILLED #MAHARASHTRA #DOMBIVLI #WOMAN