‘உதவிக்கு யாரும் இல்ல’!.. ‘தனக்குத்தானே பிரசவம் பார்த்த கர்ப்பிணி’!.. நள்ளிரவு எழும்பூர் ரயில் நிலையத்தில் பிறந்த குழந்தை..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Dec 16, 2019 10:40 AM

எழும்பூர் ரயில் நிலையத்தில் நள்ளிரவில் கர்ப்பிணி பெண் ஒருவர் தனக்குத் தானே பிரசவம் பார்த்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Woman delivers baby by herself at Egmore railway station

ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் ரேணிகுண்டா அருகே பாப்பநாடுபேட்டையை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மனைவி ரம்யா (25). இருவரும் வேலை நிமித்தமாக சென்னை வந்துள்ளனர். பின்னர் சொந்த ஊருக்கு செல்வதற்காக எழும்பூர் ரயில் நிலையம் வந்துள்ளனர். அவர்கள் செல்லவேண்டிய ரயில் அடுத்த நாள் காலையில்தான் இருந்துள்ளது. அதனால் இருவரும் இரவு ரயில் நிலையத்திலேயே தங்கியுள்ளனர்.

நள்ளிரவில் கர்ப்பிணியான ரம்யாவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. கணவர் மட்டுமே அருகில் தூங்கிக்கொண்டு இருந்துள்ளார். உதவிக்கு வேறு யாரும் இல்லாததால் தனக்குத் தானே ரம்யா பிரசவம் பார்த்துள்ளார். அதில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. காலையில் கண் விழித்த கணவரிடம் தங்களுக்கு பெண் குழந்தை பிறந்த விஷயத்தை தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களுக்கு இந்த விஷயம் தெரியவந்துள்ளது. உடனே ரயில் நிலையத்தில் உள்ள அவரச சிகிச்சை மையத்துக்கு தகவல் கொடுத்து சிகிச்சை அளித்துள்ளனர். துளியும் பயமில்லாமல் தனக்குத் தானே பிரசவம் பார்த்த பெண்ணைக் கண்டு மருத்துவர்கள் ஆச்சரியத்தில் உறைந்துள்ளனர்.

Tags : #RAILWAY #PREGNANT #WOMAN #EGMORERAILWAYSTATION #CHENNAI #BIRTH #BABY