பாலியல் வன்கொடுமை முயற்சி... எதிர்ப்பு தெரிவித்த இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம்... 10 நாட்களுக்குப் பிறகு நடந்த சோகம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Dec 17, 2019 01:02 PM

பீகாரில் பாலியல் வன்கொடுமை முயற்சியின்போது எரிக்கப்பட்ட இளம் பெண் 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

muzaffarpur woman burnt for resisting rape dies at hospital

கடந்த 7-ம் தேதி நசிர்பூர் (Nazirpur) பகுதியில், இரவு நேரப் பணிக்காக, தாயார் வெளியே சென்றிருந்தநிலையில், தனது அக்காவின் குழந்தைகள் இருவருடன், 22 வயதான இளம் பெண் ஒருவர் வீட்டில் இருந்துள்ளார். அப்போது பக்கத்து வீட்டைச் சேர்ந்த ராஜா ராய் என்பவர்,  முகேஷ் குமார் என்பவருடன் வந்து இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார்.

இதற்கு அந்தப் பெண் எதிர்ப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்த ராஜா ராய், முகேஷ் குமார் உதவியுடன் வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை இளம்பெண் மீது ஊற்றி, அவரை உயிருடன் தீயிட்டு எரித்து விட்டு சென்றுள்ளார். அதன்பின்னர் 90 சதவிகித தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட இளம்பெண், முசாஃபர்பூரில் (Muzaffarpur) உள்ள ஸ்ரீகிருஷ்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

அதன்பின்னர், நிலைமை மிகவும் மோசமடைந்ததால், பாட்னாவில் உள்ள அப்பல்லோ மருத்தவமனையில் கடந்த 10 -ம் தேதி இளம் பெண் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ராஜா ராய் மற்றும் அவருக்கு உதவிய முகேஷ் குமார் கைதுசெய்யப்பட்டனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு இளம் பெண் உயிரிழந்தார். இதனால் கதறித் துடித்த பெற்றோர், மகளை கொலை செய்த குற்றவாளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராடி வருகின்றனர்.

Tags : #WOMAN #DIED #VICTIM #ATTEMPT