‘குடிபோதையில்’... ‘கணவரின் தம்பியால்’... ‘அண்ணிக்கு நேர்ந்த கொடூரம்’... ‘பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்’!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Dec 11, 2019 12:41 PM

குடிபோதையில், தனது அண்ணியின் மூக்கை இளைஞர் ஒருவர் அறுத்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

young man chops off sister in law\'s nose with knife

உத்திரப் பிரதேச மாநிலம் மொரதாபாத் (Moradabad) பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர் காலையில், மூக்கு அறுபட்ட நிலையில் ரத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இதுகுறித்து பேசிய அந்தப் பெண், ‘என் கணவருடைய தம்பி கத்தியால் என் மூக்கை அறுத்துவிட்டார். எதனால் இப்படி செய்தார் என எனக்கு தெரியவில்லை. காலை 6 மணிக்கு நடந்த இந்த சம்பவத்தின்போது, அவர் அளவுக்கு அதிகமாக குடித்திருந்தார். அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம்’ என தெரிவித்தார்.

இது குறித்து பேசிய மஜ்ஹோலா (Majhola) காவல் நிலைய அதிகாரி, 'காலை 6.30 மணியளவில், இந்த சம்பவம் குறித்த புகார் எங்களுக்கு வந்தது. பால் சம்பந்தமான பிரச்சனை போல் தெரிகிறது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்தப் பெண், உடல் நலம் தேறி வருகிறார். குற்றவாளி எங்களுடைய காவலில் தான் இருக்கிறார். அவரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். அதன் பின்னரே முழுமையான விவரங்கள் தெரிய வரும்’ என்று கூறியுள்ளார். குடிபோதையில் இளைஞர் ஒருவர் தனது அண்ணியின் மூக்கையே அறுத்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #KNIFE #WOMAN