பக்கத்து வீட்டுப் 'பெண்ணை'... 31 இடங்களில் ‘கத்தி’யால் குத்திய இளைஞர்... ‘கல்யாணம்’ ஆனவருக்கு நிகழ்ந்த 'கொடூரம்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Dec 13, 2019 12:23 PM

கேரளாவில் பக்கத்து வீட்டுப் பெண்ணை, கத்தியால் 31 இடங்களில் குத்தி இளைஞர் ஒருவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

woman stabbed to death 31 times with knife by young man

கொல்லம் மாவட்டம் கேரளாபுரம் அஞ்சுமுக்கு என்ற இடத்தில் வசித்து வருபவர் உம்மர் ஷெரீஃப். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில், இவரது மனைவி ஷைலா (40), தனது 2 குழந்தைகளுடன் இங்கு கணவரது வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த புதன்கிழமையன்று காலை கடைக்கு சென்றபோது, இவரது வீட்டுக்கு அருகில் மறைந்திருந்த இளைஞர் ஒருவர், ஷைலாவின் பின்னாளில் இருந்து கழுத்து உள்பட 31 இடங்களில் கத்தியால் குத்தியுள்ளார்.

இதில் அலறித் துடித்த ஷைலா அங்கேயே, ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிரிழந்தார். ஷைலாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில், அங்கு வந்த போலீசார் ஷைலாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஷைலாவை கொலை செய்துவிட்டு தப்பி ஓடாமல் அங்கேயே உட்கார்ந்து இருந்த இளைஞரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில் ஷைலாவின் வீட்டுக்கு அருகே வசித்து வந்த லாரி ஓட்டுநரான அனீஷ் (30) என்ற இளைஞர் என்று தெரிய வந்தது. அவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், ஷைலாவும், அவர் மீது சமீபத்தில் தன்னை துன்புறுத்தியதாக அனீஷ் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்ததே கொலைக்கு காரணமாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

மேலும் கணவர் வெளிநாட்டில் வசித்து வருவதால், பக்கத்து வீட்டு இளைஞரான அனீஷ் உடன் ஷைலா நெருங்கி பழகி வந்ததாகவும், பின்னர் மனம் திருந்தி அவருடன் பழகியதை நிறுத்தியதுடன், போலீசில் புகார் அளித்ததால் இந்த கொலை நடந்திருக்கலாம் என்று தெரிகிறது. இந்த சம்பவத்தில் அனீஷை கைது செய்துள்ள போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #KERALA #MURDERED #KILLED #MAN #WOMAN