‘4 வயதில் பாலியல் தொல்லை’! ‘10-வது படிக்கும்போது 3 முறை கருக்கலைப்பு’! தாய்மாமாவால் பெண்ணுக்கு நடந்த கொடுமை..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Dec 11, 2019 12:29 PM

டெல்லியில் 4 வயதில் இருந்தே தாய்மாமாவால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவதாக 40 வயது பெண் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

40 yr old Woman takes uncle to court for raping her since she was 4

டெல்லியை சேர்ந்த 40 வயது பெண் நீதிமன்றத்தில் தனது தாய்மாமா மீது பாலியல் வன்கொடுமை தொடர்பான புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், 1981-ம் ஆண்டு தனக்கு 4 வயது, அப்போது முதன்முதலாக தனது தாய்மாமாவால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் தான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது மூன்று முறை கருக்கலைப்பு செய்ததாகவும், அதுவரையிலும் தான் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

பின்னர் கடந்த 2014-ம் ஆண்டு தனக்கு விவாகரத்து ஆனதில் இருந்து தற்போது வரை, தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி வருதாக கூறியுள்ளார். இதுகுறித்து தன்னுடைய அம்மா மற்றும் குடும்பத்தினரிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் மாறாக இதனை யாரிடம் சொல்லக்கூடாது என தன்னை மிரட்டுவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து கடந்த 2016-ம் ஆண்டு தனது தாய் இறந்தபோது தன்னை பார்க்க அனுமதிக்கவில்லை என்றும், அவர்கள் விருப்பப்படி நடந்துகொள்வதாக ஒப்புக்கொண்ட பிறகே தாயின் உடலை பார்க்க அனுமதித்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்டவரின் மீது பாலியல் வன்கொடுமை, மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : #SEXUALABUSE #WOMAN #UNCLE #DELHI #ABORTIONS