'ரிலீஸ் ஆன 6 மாதத்தில் அதே ஸ்டைலில் கொலை!'.. மீண்டும் அலறவிடும் 'பிரபல சீரியல் கில்லர்!'.. போலீஸ் வலைவீச்சு!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Dec 17, 2019 05:26 PM

தாய்லாந்தில் நன்னடத்தை காரணமாக ரிலீஸ் ஆன  சீரியல் கில்லர் ஒருவரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Police hunting a serial killer for killing another woman

தாய்லாந்தில் 55 வயதான சோன்கித் பும்பாங் (Somkid Pumpuang) என்கிற நபர் பாலியல் தொழில்களில் ஈடுபட்டு வந்த 5 பெண்களை கொன்ற காரணத்துக்காக 2005-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இதன் பிறகு அவர் பல ஆண்டுகாலம் தண்டனையை அனுபவித்துக் கொண்டிருந்தார். ஆனால் தாய்லாந்தில் அதிக சிறைக் கைதிகளை அடைத்து வைப்பதற்கான வசதி, சிறையில் இல்லை என்பதால், நன்னடத்தையின் அடிப்படையில் அவ்வப்போது கைதிகள் விடுதலை செய்யப்படுவது உண்டு.

இந்நிலையில், ஒரே மாதிரி சீரியல் கொலைகளை செய்துவிட்டு சிறை தண்டனை அனுபவித்து வந்த சோன்கித் பும்பாங் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர்தான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால், ரிலீஸான சில மாதங்களிலேயே அவர் 51 வயதான ஹோட்டல் பணியாளர் ஒருவரை தனது பாணியிலேயே மீண்டும் கொன்றுள்ளதாக போலீஸாரால் அடையாளங்காணப்பட்டுள்ளார்.

இதனை அடுத்து இவரை போலீஸார் தீவிரமாக தேடிவருவதோடு, அந்நாட்டில், இவரை அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தாய்லாந்து ஜாக் தி ரிப்பர் (Thailand Jack the Ripper) என்று குறிப்பிட்டு வருகின்றன. Jack the Ripper 1888ல் லண்டனில் தொடர் கொலைகளைச் செய்துவந்த பிரபலமான சீரியல் கில்லர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #SERIAL KILLER #PRISON #SOMKID PUMPUANG #THAILAND #POLICE