‘ஓடும் பேருந்தில்’ இளம்பெண்ணுக்கு.. திடீரென ‘தாலி கட்டிய’ இளைஞர்.. ‘அதிர்ச்சியை’ ஏற்படுத்திய சம்பவம்..
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Saranya | Dec 10, 2019 03:38 PM
ஓடும் பேருந்தில் இளம்பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து, அவரை போலீஸில் ஒப்படைத்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சான்றோர் குப்பம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஜெகன். இவர் கல்லூரியில் படிக்கும்போது இருந்தே அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்தப் பெண்ணுக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜெகன் அவரிடம் தன் காதலைத் தெரிவித்துள்ளார். அப்போது அந்தப் பெண் அவருடைய காதலை ஏற்க மறுத்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து இன்று காலை பேருந்தில் சென்றுகொண்டிருந்த அந்தப் பெண்ணின் கழுத்தில் திடீரென ஜெகன் ஏற்கெனவே 3 முடிச்சு போட்டு எடுத்து வந்திருந்த தாலியை போட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் சத்தம்போட, பேருந்தில் இருந்த மற்ற பயணிகள் ஜெகனைப் பிடித்து அடித்து போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் ஜெகனை கைது செய்துள்ள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.