‘அந்தரங்க உறுப்பில் மதுவை ஊற்றி பலாத்காரம்’.. இன்ஸ்டாகிராம் நண்பரால் கல்லூரி மாணவிக்கு நடந்த கொடூரம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Jan 31, 2020 06:27 PM

ஆக்ராவில் கல்லூரி மாணவியின் அந்தரங்க உறுப்பில் மதுவை ஊற்றி இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Aviation student arrested for raping undergrad at private hotel

ஆக்ராவில் உள்ள விமானப்போக்குவரத்து கல்லூரியில் 23 வயது தர்ஸ் கௌதம் என்ற மாணவர் பயின்று வருகிறார். இவர் அதே கல்லூரியில் பயிலும் 19 வயது மாணவியுடன் இன்ஸ்டாகிராம் மூலம் நண்பராக பழகியுள்ளார். நாளடைவில் இருவரும் ஒருவருக்கொருவர் தங்களது செல்போன் எண்களை பகிர்ந்து நண்பர்களாகியுள்ளனர்

இந்த நிலையில் கடந்த புதன்கிழமை இருவரும் ஆக்ராவில் உள்ள ஹோட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளனர். அப்போது இருவரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது. பின்னர் அப்பெண் மதுபோதையில் மயங்கியுள்ளார். மயக்க நிலையில் இருந்த பெண்ணை அந்த இளைஞர் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அங்கியிருந்து தப்பியுள்ளார்.

மயக்கம் தெளிந்தபின் தனக்கு நடந்த கொடுமை குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். பின்னர் அப்பெண்ணை போலீசார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மருத்துவ பரிசோதனையில் அப்பெண்ணின் அந்தரங்க உறுப்பில் மதுவை ஊற்றி கொடுமையான முறையில் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது. இந்நிலையில் ஹோட்டலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் தர்ஸ் கௌதமின் முகம் பதிவாகியுள்ளது. அதன் அடிப்படையில் அவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : #SEXUALABUSE #COLLEGESTUDENTS #INSTAGRAM #ARRESTED