“பிரதமருக்கே வந்த கொரோனா!”... மருத்துவமனையில் அனுமதி .. ‘குணமடைய வாழ்த்திய ட்ரம்ப்!’.. கலங்கி நிற்கும் பிரிட்டன் மக்கள்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Apr 06, 2020 02:04 PM

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் சுமார் 28 நாடுகளில் சக்கை போடு போட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வந்த நிலையில் பிரிட்டனிலும் இந்த கொரோனா வைரஸ் வெகு வேகமாக பரவியது.

Boris Johnson admitted in hospital after coronavirus test positive

இந்த நோயினால் பிரிட்டனில் சுமார் 48 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு ஏறத்தாழ 6000 பேர் பலியாகியுள்ளனர். இது பிரிட்டனின் பெரும் தலைவர்களையும் தாக்கியது. இந்த நிலையில் இளவரசர் சார்லஸ் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி, பின்னர் சிகிச்சைக்கு பிறகு தற்போது குணம் அடைந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதேபோல் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு வைரஸ் தாக்கியிருப்பது கண்டறியப்பட்டது. 55 வயதான அவர் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

எனினும் 10 நாட்களுக்குப் பின்னர் மீண்டும் அவருக்கு நோயின் அறிகுறி தென்பட்டது. இந்நிலையில் தற்போது அவர் கூடுதல் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைக்காக தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் விரைவில் குணமடைய வேண்டும் என்று அமெரிக்கா சார்பில் அதிபர் ட்ரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளார்.