‘சென்னை முதலிடம்.. கோவை 2வது இடம்!’.. வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்ட 90,824 பேர்! ஏப்ரல் 5-ஆம் தேதிவரையிலான முழு விபரங்கள் உள்ளே!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இதுவரை 2 லட்சத்து 10 ஆயிரத்து 538 பேர் தெர்மல் ஸ்கிரீனிங் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களுள் 90 ஆயிரத்து 824 பேர் வீட்டிலும், 127 பேர் மருத்துவமனைகளிலும் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இதுவரை பரிசோதிக்கப்பட்ட 4612 ரத்த மாதிரிகளுள் 571 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன. இன்னும் 339 பேரின் ரத்த மாதிரிகளின் பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளதாக தெரிகிறது. மேலும் தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட 1848 பேரில் 8 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
குறிப்பாக டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 1246 பேரில் 522 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டது. மொத்தமாக ஏப்ரல் 5-ஆம் தேதி வரையிலான இந்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில் 571 பேர் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை பொருத்தவரை சென்னையில் 95 பேர் அதிகபட்சமாகவும், அதற்கு அடுத்த மாவட்டமாக கோவையில் 58 பேர் அதிகபட்சமாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.