'போதும் சாமி...' 'உங்க கிட்ட பீர் வித்தது போதும்...' எந்த நேரத்துல 'பேர் வச்சமோ' தெரியல... 'கடையை சாத்தும்' பிரபல 'பீர்' கம்பெனி...
முகப்பு > செய்திகள் > உலகம்மெக்ஸிகோவில் புகழ்பெற்ற கொரோனா மதுபான நிறுவனம் இன்று முதல் தனது உற்பத்தியை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் உலக நாடுகள் அனைத்தும் தனிமைப்படுத்திக் கொள்ளுதலை பொதுமக்களுக்கு பரிந்துரைத்து வருகின்றன. இதனால் தொழிலாளர்கள் பலர் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கிப் போயுள்ளனர்.
சில தவிர்க்க முடியாத முக்கிய நிறுவனங்கள் மட்டுமே தங்கள் வேலையை தொடர்கின்றன. இந்நிலையில், மெக்சிகோவில் அத்தியாவசியமற்ற தொழிற்கூடங்களை ஏப்ரல் இறுதி வரை மூட மெக்ஸிகோ அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து தன்னுடைய மதுபான உற்பத்தியை நிறுத்தவிருப்பதாக கொரோனா மதுபான நிறுவனம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே கொரோனா என்ற பெயரால் தங்களது மதுபான விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்திருந்தது. அமெரிக்க குடிமகன்களில் 38 சதவீதம் பேர் கொரோனா பீரை எந்த சூழ்நிலையிலும் வாங்க மாட்டோம் என்று தெரிவித்த நிலையில் தற்போது அந்நிறுவன ஆலை மூடப்பட்டுள்ளது.
