நிறைந்த கல்லறைகள்... 'புதைக்க' இடம் இல்லாமல்... 'சடலங்களை' ரோட்டில் வைக்கும் அவலம்!
முகப்பு > செய்திகள் > உலகம்கல்லறைகள் நிறைந்து போனதால் இறப்பவர்களின் உடல்களை ரோட்டில் வைக்கும் அவலம் ஈக்குவேடார் நாட்டில் நிகழ்கிறது.

தென் அமெரிக்காவின் வடமேற்கு முனையில் அமைந்து இருக்கும் சிறிய நாடான ஈக்குவேடார் நாட்டிலும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடிவருகிறது. மருத்துவம் மற்றும் சுகாதாரத்தில் மிகவும் பின்தங்கி இருக்கும் இந்நாட்டில் போதுமான மருத்துவமனைகள் இல்லாததால் கொரோனா பாதித்த பெரும்பாலோனோர் வீட்டிலேயே இருக்கின்றனர். இதனால் அவர்களை கண்டு குடும்ப உறுப்பினர்கள் அச்சப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இது மட்டுமின்றி அந்நாட்டில் உள்ள கல்லறைகள் அனைத்தும் நிரம்பி வழிவதால் இறந்து போனவர்களின் உடல்களை சாலையில் விட்டுச்செல்லும் அவலம் தற்போது நிகழ ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டு மக்கள் ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டியில், ''இறந்தவர்களின் உடலை புதைப்பதற்கு அதிகாரிகளுக்கு போன் செய்து சோர்ந்து விட்டோம். இதனால் வேறு வழியின்றி அன்புக்குரியவர்களை சாலையில் விட்டுச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது,'' என தெரிவித்து இருக்கின்றனர்.
இதுபற்றி குயாகுவிலின் நகர மேயர் சிந்தியா விட்டேரி, ''கல்லறைகள் உருவாக்கப்படும் வரை இறந்தவர்களின் உடல்கள் 12 மீட்டர், 40 அடி உயரம் கொண்ட பெரும் குளிர் கொள்கலனுக்குள் வைக்கப்படும். இதுவரை இறந்தவர்களின் உடல் துறைமுக நகரில் உள்ள தனியார் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஒரு நாளுக்கு 100-க்கும் மேற்பட்ட உடல்கள் சேகரிக்கப்படுகின்றன,'' என தெரிவித்து இருக்கிறார்.
