இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Apr 06, 2020 10:22 AM

1. பிரதமர் அழைப்பை ஏற்று நாடு முழுவதும் மக்கள் அகல்விளக்கு மற்றும் மெழுகுவர்த்தி ஏற்றினர்.

TamilNews Important headlines read here for more April 06

2. தமிழ்நாட்டில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

3. விளக்கு ஏற்றுவதால் இந்தியாவைவிட்டு கொரோனா சென்றுவிடாது. ஆனால் பிரதமரின் பேச்சுக்கு மரியாதை கொடுத்து விளக்குகளை ஏற்றினோம். சினிமா நடிகர்களிடமும், விளையாட்டு வீரர்களிடமும் மட்டும் பேசுவது பிரதமர் வேலை இல்லை. இப்போது பேச வேண்டியது பொருளாதார மேதைகளிடம் என புதுச்சேரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

4. தமிழகத்தில் 9 நிமிடங்கள் அனைவரும் மின்விளக்குகளை அணைத்ததன் மூலம் 2,200 மெகாவாட் மின்சார பயன்பாடு குறைந்திருப்பதாகவும், சென்னையில் மட்டும் 350 மெகாவாட் அளவு மின்சாரம் குறைந்திருப்பதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

5. டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கு கொரோனா தொற்று இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

6. அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

7. கொரோனா எதிரொலியாக பிரதமர் உள்பட எம்பிக்களின் சம்பளத்தில் 30 சதவிகிதம் குறைக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

8. கொரோனா சிகிச்சைக்கு தேமுதிக தலைமை அலுவலகம், கல்லூரியை பயன்படுத்திக் கொள்ளலாம் என தமிழக அரசுக்கு விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

9. நாடு முழுவதும் கொரோனா சிகிச்சைக்காக 2,500 ரயில் பெட்டிகளில் 40 ஆயிரம் படுக்கைகள் தயார் இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது.