"அமெரிக்கா மேல கொரோனாவுக்கு அப்படி என்ன கோபம்...?" "ஏன் அமெரிக்காவில் மட்டும் இவ்வளவு பாதிப்பு...?" 'நியூயார்க் டைம்ஸ்' வெளியிட்ட 'புதிய தகவல்'...
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் கொரோனா வைரஸ் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதற்கு காரணம் என்ன? என்பதற்கான புதிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

அமெரிக்காவில் இதுவரை கொரோனாவுக்கு 3.37 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 9,610 பேர் பலியாகி உள்ளனர். ஐரோப்பிய நாடுகளை காட்டிலும் அமெரிக்காவில் அதிவேகமாக இந்த வைரஸ் பரவி உயிர்பலி வாங்கி வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா வேகமாக பரவுவது ஏன் என 'நியூயார்க் டைம்ஸ்' கட்டுரை வெளியிட்டுள்ளது.
அதில், சீனாவின் வூகான் நகரில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதற்கு பின்னர், சீனாவலிருந்து 4 லட்சத்து 30 ஆயிரம் பேர் நேரடி விமானம் மூலம் அமெரிக்கா வந்ததுதான் அமெரிக்காவில் வைரஸ் கட்டுக்கடங்காமல் பரவியதற்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வூகானிலிருந்து மட்டும் ஆயிரக்கணக்கானோர் நேரடியாக விமானம் மூலம் அமெரிக்கா வந்துள்ளனர்.
சீனாவிலிருந்து 1,300 விமானங்கள் அமெரிக்காவின் 17 முக்கிய நகரங்களுக்கு இயக்கப்பட்டுள்ளன. அமெரிக்க வைரஸ் குறித்து விழித்துக் கொள்வதற்கு முன்பாகவே சுமார் 4 லட்சம் பேர் அமெரிக்காவிற்குள் ஊடுருவி விட்டனர். அப்போது விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை தீவிரமாக இல்லாததால் அவர்கள் எளிதில் அமெரிக்காவிற்குள் வந்துவிட்டார்கள்.
ஜனவரி மாதம் பிற்பகுதியில் தான் அமெரிக்கா விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்தியது. அதற்கு முன் சீனாவிலிருந்து அமெரிக்கா வந்த, சுமார் 3.81 லட்சம் பயணிகளில் எத்தனை பேருக்கு கொரோனா இருந்தது என தெரியவில்லை. இதுதான் அங்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்த காரணம் என நியூயார்க் டைம்ஸ் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
