'விலங்குகளையும் விட்டு வைக்காத கொரோனா...' 'அமெரிக்காவில்' 'புலிக்கு' கொரோனா பாதிப்பு... 'ஆச்சரியத்தில்' ஆழ்ந்துள்ள 'மருத்துவ' உலகம்...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Apr 06, 2020 10:40 AM

அமெரிக்காவில் Bronx Zoo-வில் உள்ள  ஒரு புலிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Coronavirus affects tiger in zoo in the United States

உலக நாடுகள் பலவற்றை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 69ஆயிரத்தை கடந்துவிட்டது.

பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையோ 12 லட்சத்தை கடந்து உயர்ந்து கொண்டிருக்கிறது. கொரோனவை சமாளிக்க முடியாமல் அனைத்து நாடுகளும் திணறி வருகின்றன. இந்நிலையில் மனிதர்களிடம் மட்டுமே காணப்பட்ட கொரோனா தாக்குதல் தற்போது விலங்குகளையும் தாக்குவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவில் Bronx Zoo-வில் உள்ள புலி ஒன்றுக்கு தற்போது கொரனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. முதன்முதலாக ஒரு விலங்கிற்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டது இதுவே முதன்முறையாகும். இந்த உயிரியல் பூங்காவில் உள்ள மேலும் 6 புலிகள் மற்றும் சிங்கங்களுக்கு கொரோனா அறிகுறிகள் உள்ளதாக பூங்கா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இந்த வைரஸ், பூங்காவில் பணியாற்றும் ஊழியரிடமிருந்து விலங்குக்கு பரவியிருக்கலாம் என கூறப்படுகிறது.

விலங்குகளை கொரோனா பாதிக்குமா? என்ற கேள்விக்கு இதுவரை மருத்துவ ரீதியிலான தெளிவான விளக்கம் ஏதும் கிடைக்காத நிலையில், புலி ஒன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது என வெளியான செய்தி பலரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.