பள்ளி, கல்லூரிகள் 'மீண்டும்' திறப்பது குறித்து... 'இந்த' தேதியில் முடிவு செய்யப்படும்: மத்திய அமைச்சர்
முகப்பு > செய்திகள் > இந்தியாபள்ளி, கல்லூரிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்பது ஏப்ரல் 14-ம் தேதி முடிவு செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் தெரிவித்து இருக்கிறார்.
கொரோனா அச்சம் காரணமாக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு பிறப்பிக்கும் முன்பே அவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் தற்போது இந்தியா முழுவதும் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்களும் விடுமுறையில் இருக்கின்றனர்.
இதற்கிடையில் ஊரடங்கு ஏப்ரல் 14-ம் தேதிக்கு பின்னர் மீண்டும் நீட்டிக்கப்படாது என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதனால் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த நிலையில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் போக்ரியால் இதுகுறித்து பேட்டி அளித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர்,'' ஊரடங்கு முடிந்ததும் கொரோனா வைரஸ் நிலைமை குறித்து ஆய்வு செய்த பின்னரே பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படும். மாணவர்கள், ஆசிரியர்களின் பாதுகாப்பு அரசுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஊரடங்கு நீக்கப்பட்டவுடன் நிலுவையில் உள்ள தேர்வுகள் மற்றும் மதிப்பீட்டை நடத்துவதற்கு ஒரு திட்டம் தயாராக உள்ளது,'' என தெரிவித்து இருக்கிறார்.