‘எங்களுக்கெல்லாம் ஃபயரே ஸ்ப்ரே மாதிரி!’.. ‘நெருப்பை வைத்து சாகசம் செய்தபோது விபரீதம்!’.. தீயாய் பரவும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாநாடு முழுவதும் கொரோனாவுக்கு எதிரான விழிப்புணர்வாக, கொரோனாவுக்கு எதிரான இந்திய மக்களின் ஒற்றுமையைக் காட்டும் விதத்திலும், கொரோனா எனும் இருளை விரட்டும் விதத்திலும் இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் வரையில் மின்விளக்குகளை அணைத்துவிட்டு அகல் விளக்கு, மெழுகுவர்த்தி, டார்ச் மற்றும் செல்போன் லைட்டுகளை எரியவிடும்படி பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

அதன் அடிப்படையில் நேற்றைய தினம், அனைவரும் இந்த நிகழ்வில் ஈடுபட்டனர். இதனிடையே இந்தியாவைச் சேர்ந்த ஒருவர், தீப்பந்தத்தை வைத்துக்கொண்டு வாயால் ஊதி ஊதி, தீச்சுவாலையை பெரிதாக வரவழைத்து வேடிக்கை காண்பிடித்ததுவும், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவரது வாயில் தீப்பற்றிய சம்பவம் அங்கிருந்தவர்களை பதறவைத்ததுவுமான வீடியோ ஒன்று ட்விட்டரில் பரவி வருகிறது.
உடனே அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து அவரது வாயில் பற்றி எரிந்த தீயை அணைத்து அவரைக் காப்பாற்றினர். இந்த வீடியோ ட்விட்டரில் வலம் வருகிறது. எனினும் இந்த வீடியோ உண்மையில் எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்பன பற்றிய
Bhakts of this week award goes to this chomu...! 😂😂😂 pic.twitter.com/0h8kNN5eIo
— Nisar നിസാർ (@nisarpari) April 5, 2020
தகவல்கள் சரிவர கிடைக்கப்பெறவில்லை.
