‘ஊரடங்கு உத்தரவால் சாப்பாட்டுக்கே வழியில்லாம கஷ்டபடுறாங்க’!.. ‘ட்விட்டரில் உடனடி ரெஸ்பான்ஸ்’.. அசத்தும் முதல்வர்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Apr 06, 2020 11:27 AM

ட்விட்டரில் உதவி கோரி யார் பதிவு போட்டாலும் அதற்கு உடனடியாக ரெஸ்பான்ஸ் செய்யும் முதல்வரின் செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

CM Edappadi Palaniswami quick response over twitter for seeking help

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன. அந்த வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ட்விட்டர் பக்கத்தில் உதவி கேட்டு யார் பதிவு கேட்டாலும் அதனை உடனடியாக டேக் செய்து சம்பந்தப்பட்டவர்களுக்கு உதவி கிடைக்க வழிவகை செய்கிறார். முதல்வரின் இந்த உடனடி ரெஸ்பான்ஸ் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இடும்பாவனம் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இடும்பாவனம், அடஞ்சவிளாகம் பகுதியில் குடிசைகள் அமைத்து பிழைத்து வரும் 40க்கும் மேற்பட்ட நரிக்குறவ குடும்பங்கள் ஊரடங்கு உத்தரவால் உணவுக்கே வழியின்றி சில நாட்களாக அல்லாடி வருகின்றனர். அரசும், அதிகாரிகளும் இதனைக் கவனமெடுத்து உடனடியாக அவர்களுக்கு உதவ வேண்டும் எனக் கோருகிறோம்’ என பதிவிட்டிருந்தார்.

இதை பதிவிட்ட சில மணிநேரங்களில் ட்விட்டரில் இடும்பாவனம் கார்த்தியை டேக் செய்து நரிக்குறவ மக்களுக்கு தேவையான பொருட்களை கொண்டு சேர்த்து அந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அதேபோல் ஆந்திராவில் தவிக்கும் தமிழக குடும்பங்களுக்கு உதவிகோரி ஒருவர் ட்விட்டரில் பதிவிட, உடனே அதனை ஆந்திர முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று அவர்களுக்கு உதவி கிடைக்க வழிவகை செய்தார். முதல்வரின் இந்த உடனடி ரெஸ்பான்ஸ் மக்கள் மத்தியில் வரவேற்பையும், பாராட்டையும் பெற்று வருகிறது.