'14 நாட்களில்' வேலையிழந்த '7 லட்சம்' பேர்... குறிப்பாக 'இவர்களுக்கே' பாதிப்பு... வரும் நாட்களில் 'மேலும்' மோசமாகும்... நிபுணர்கள் 'எச்சரிகை'...
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த 14 நாட்களில் 7 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர்.

சீனாவின் வுஹான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் தற்போது பெரும்பாலான உலக நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி, ஸ்பெயின், ஈரான் ஆகிய நாடுகள் கொரோனாவால் மிகவும் மோசமான பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. கொரோனா பாதிப்பால் அமெரிக்காவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதுவரை அங்கு 2.77 லட்சம் பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 7,406 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து கொரோனா பாதிப்பால் அமெரிக்காவின் பொருளாதாரம் கடும் பாதிப்பை சந்திக்கும் என மார்க்கன் ஸ்டான்லி எனும் பொருளாதார ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது. மேலும் அங்கு கடந்த 14 நாட்களில் 7 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இந்த நிலை வரும் நாட்களில் மோசமாகும் எனவும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
அத்துடன் கடந்த 20 நாட்களில் அமெரிக்காவில் வேலைவாய்ப்பு இல்லாதவர்கள் எண்ணிக்கை 3.5 சதவீதத்திலிருந்து 4.4 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும், மால்கள், தியேட்டர்கள், ஸ்டோர்களில் வேலை செய்பவர்களே அதிக அளவில் தங்களுடைய வேலைகளை இழந்துள்ளதாவும் கூறப்பட்டுள்ளது. மே இறுதிக்குள் 8 லட்சம் பேர் வேலையை இழக்கலாம் எனவும், அங்கு தற்போது தங்களுக்கு வேலை இல்லை என 66 லட்சம் பேர் பதிவு செய்துள்ள நிலையில், மே 8ஆம் தேதிக்குள் இது 1.1 கோடியாக உயரும் எனவும் கூறப்பட்டுள்ளது.
