“கொரோனா சிகிச்சை அளிக்கப்போகும் எங்களை நிர்வாணமாக அனுப்புகிறார்கள்!”... செவிலியர்களின் நூதன போராட்டம்!
முகப்பு > செய்திகள் > உலகம்பிரான்சில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக போராடும் மருத்துவர்களும், செவிலியர்களும் நிர்வாணமாக புகைப்படங்களை வெளியிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த தொற்றுநோயை எதிர்கொள்ளும் தங்களுக்கும், நோயாளிகளுக்கும் அந்நாட்டு அரசாங்கம் ஆபத்தை விளைவிப்பதாகவும், நோயாளிகளுக்கு முறையாக சிகிச்சையளிப்பதற்கும், தங்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் தேவை என்றும் உள்ளூர் மருத்துவ ஊழியர்கள் அரசாங்கத்திடமிருந்து பெற்றுள்ள முக மூடிகள் எல்லாம் பழைய முகமூடிகள் என்றும் கூறியதோடு, சரியான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்துவிட்டு வீட்டுக்கு சென்றால், தாங்களே அந்த நோயை வீட்டிற்கு கொண்டு செல்ல வேண்டிய சூழல் உருவாவதாகவும் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக, இந்த தொற்றுநோயை எதிர்கொள்ள அரசாங்கம் தங்களை நிர்வாணமாக அனுப்புவதாகக் கூறியும், இதை குறிப்பிட்டும், #Poilcontrelecovid (கொரோனாவுக்கு எதிராக நிர்வாணமாக) என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி, அமைதியான ஆர்ப்பாட்டத்தில் அனைத்து வயதினரின் மருத்துவர்களும் ஈடுபட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் பிரான்சும் ஒன்று என்பது, தற்போது அந்நாட்டில் 82,165 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 6,507 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.