‘சாப்பாட்டில் இருந்த முடி’ ஆத்திரத்தில் மனைவிக்கு கணவன் கொடுத்த கொடூர தண்டனை..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Selvakumar | Oct 08, 2019 06:05 PM

சாப்பாட்டில் முடி இருந்த காரணத்துக்காக மனைவிக்கு மொட்டை அடித்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

Bangladeshi man shaved wife’s head after finding hair in food

வங்கதேச நாட்டின் ஜாய்புர்ஹட் பகுதியைச் சேர்ந்தவர் பப்லூ மொண்டல் (35). இவர் நேற்று காலை வீட்டில் சாப்பிட்டுக்கொண்டிருந்துள்ளார். அப்போது சாப்பாட்டில் முடி இருந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பப்லூ மொண்டல் மனைவியின் தலைமுடியை கத்தியால் வெட்டி மொட்டை அடித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தெரிவித்த காவல்துறை அதிகாரி ஷாரியர் கான், ‘பப்லூவுக்கு அவரது மனைவி பால் கலந்த சாதத்தை காலை உணவாக கொடுத்துள்ளார். அதில் முடி இருந்ததால் ஆத்திரத்தில் மனைவியின் தலைமுடியை கத்தியால் வெட்டியுள்ளார். இவரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 14 வருடங்கள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது’ என  அவர் தெரிவித்துள்ளார்.

Tags : #BANGLADESH #MAN #SHAVED #WIFE #HAIR #FOOD #BREAKFAST