‘இனி ஸ்விக்கி டெலிவரி’.. ‘இங்க எல்லாமும் கிடைக்கும்’.. ‘வெளியாகியுள்ள புதிய அறிவிப்பு’..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Oct 08, 2019 10:46 AM

இந்தியா முழுவதும் புதிதாக 130 நகரங்களில் தனது கிளைகளைத் தொடங்க ஸ்விக்கி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Swiggy to Expand Presence to 600 Cities 200 Universities in 2019

கடந்த 2014ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி மக்களின் வரவேற்பால் தற்போது 500 நகரங்களிலும், 75 பல்கலைக்கழகங்களிலும் தனது கிளைகளைக் கொண்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 130 நகரங்களிலும், 200 பல்கலைக்கழகங்களிலும் தனது கிளைகளைத் தொடங்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பல்கலைக்கழகங்களில் தொடங்க உள்ள கிளைகளில் அங்கு படிக்கும் மாணவர்களை பணியில் சேர்த்துக் கொள்ளவும் ஸ்விக்கி முடிவு செய்துள்ளது.

குறிப்பாக கர்நாடகாவில் பாகல்கோட், ஆந்திரப்பிரதேசத்தில் இந்துபூர், தமிழகத்தில் ராமநாதபுரம், சிவகாசி, மகாராஷ்ட்ராவில் சவாந்வாடி மற்றும் சங்கம்நர், அசாமில் ஜாரத் ஆகிய நகரங்களில் ஸ்விக்கி புதிய கிளைகளைத் தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது. 2019 ஏப்ரல் வரை இந்தியாவில் 1.4 லட்சம் உணவகங்களுடன் இணைப்பில் உள்ள ஸ்விக்கி நிறுவனம் கடந்த 6 மாதங்களில் மட்டும் மேலும் 15 ஆயிரம் உணவகங்களுடன் இணைந்துள்ளது.

Tags : #SWIGGY #ONLINE #FOOD #DELIVERY #CITIES #UNIVERSITIES #EXPAND #TAMILNADU #RAMANATHAPURAM #SIVAKASI