‘2 குழந்தைகளுடன் கணவர் அனுப்பிய புகைப்படம்’.. ‘பதறியடித்து ஓடிவந்த மனைவி’.. ‘அதற்குள் நடந்துமுடிந்த விபரீதம்’..

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Oct 05, 2019 04:32 PM

மனைவி விவாகரத்துக்கு விண்ணப்பித்ததால் மனமுடைந்த கணவர் 2 குழந்தைகளுடன் 9வது மாடியில் இருந்து குதித்துள்ளார்.

Man jumped to death with kids while wife went to file for divorce

ரஷ்யாவின் சரதோவ் நகரில் வசித்துவந்த ரோமன் மின்காய்லோவ் - ஜரினா தம்பதிக்கு சோஃபியா (4), ஆர்யோம் (1) என்ற 2 குழந்தைகள் இருந்துள்ளனர். ரயில்வேயில் வேலை பார்த்துவந்த ரோமனுக்கு தனது மனைவிக்கு வேறு ஒரு காதல் இருக்கக்கூடும் என சந்தேகம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அவருடைய மனைவி ஜெரினா விவாகரத்துக்கு விண்ணப்பிக்கப் போவதாகக் கூறிவிட்டு வழக்கறிஞர் அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். பின்னர் ஜெரினா விவாகரத்துக்கு விண்ணப்பித்துவிட்டதை அறிந்த ரோமன், தங்களுடைய 2 குழந்தைகளையும் தூக்கிச் சென்று பால்கனியில் நின்று புகைப்படம் எடுத்து இங்கிருந்து குதிக்கப் போகிறேன் என அதை மனைவிக்கு அனுப்பியுள்ளார்.

இதைப்பார்த்த ஜெரினா பதறியடித்து உடனடியாக வீட்டுக்குத் திரும்பியுள்ளார். ஆனால் அவர் வந்து சேர்வதற்குள் ரோமன் தனது 2 குழந்தைகளுடன்  9வது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில் ரோமனும் அவர்களுடைய ஒரு வயது மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த அவர்களுடைய 4 வயது மகள் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவர்கள் குடும்பத்தில் எந்தவித பிரச்சனையும் இருந்ததற்கான அறிகுறியே இல்லை என அக்கம்பக்கத்தினர் கூறியுள்ள நிலையில் தன்னுடைய இந்த முடிவுக்கு தன் மனைவியே காரணம் என ரோமன் எழுதிய கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Tags : #RUSSIA #HUSBAND #WIFE #AFFAIR #SUICIDE #KIDS #BOY #GIRL #BALCONY