‘விக்கிற்கு கீழே’.. ‘இப்படி எல்லாம் கூட ஒரு கடத்தலா?’.. ‘வசமாக சிக்கிய இளைஞர்’..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Oct 05, 2019 03:10 PM

தலையில் விக் அணிந்து அதற்குள் வைத்து தங்கத்தைக் கடத்திய இளைஞர் சுங்கத்துறை அதிகாரிகளிடம் வசமாக சிக்கியுள்ளார்.

Youngster held at Cochin airport for smuggling gold under wig

கேரள மாநிலம் மலப்புரம் பகுதியைச் சேர்ந்த நௌஷத் என்பவர் ஷார்ஜாவிலிருந்து விமானம் மூலம் கொச்சி வந்தடைந்துள்ளார். கொச்சி விமான நிலையத்தில் நௌஷத்தைப் பார்த்த அதிகாரிகளுக்கு அவர்மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவரை சோதித்துப் பார்த்தபோது அவர் தலையில் அணிந்திருந்த விக்கிற்கு அடியில் தங்கத்தை வைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதற்காக நௌஷத் தலையின் ஒரு பகுதியில் உள்ள முடியை மட்டும் நீக்கிவிட்டு அந்த இடத்தில் கடத்தவேண்டிய தங்கத்தை கச்சிதமாகப் பொருத்தி அதன்மேல் விக்கை வைத்துள்ளார். இது பார்ப்பதற்கு எந்தவித சந்தேகத்தையும் ஏற்படுத்தாதவாறு இருந்த நிலையிலும் சுங்கத்துறை அதிகாரிகள் அவரை வசமாக மடக்கிப் பிடித்துள்ளனர். 1.13 கிலோ தங்கத்தை நௌஷத்திடமிருந்து கைப்பற்றியுள்ள அவர்கள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #KERALA #AIRPORT #COCHIN #YOUGSTER #MAN #HAIR #WIG #GOLD #SMUGGLING