'2 பெண்கள் சேர்ந்து 19 வயது இளைஞரை கட்டிப்போட்டு'.. 'வீடியோ எடுத்து கூட்டு பலாத்காரம்'.. ஐபோன் ரிப்பேர் பண்ண போனவருக்கு நேர்ந்த சோகம்!
முகப்பு > செய்திகள் > உலகம்By Siva Sankar | Sep 27, 2019 12:59 PM
ஐபோனை பழுதுபார்ப்பதற்காக ரஷ்யாவின் டாட்டர்ஸ்டன் மாவட்டத்தில் உள்ள புகுல்மா நகரத்தில் உள்ள ஒரு வீட்டிற்கு 19 வயது இளைஞர் சென்றுள்ளார்.

அங்கு 22 வயது பெண் ஒருவர், தனது ஐபோனை பழுதுபார்க்கும்படி அவரிடம் கொடுத்துள்ளார். ஆனால், ஐபோனை தன் வீட்டிற்கு வாங்கிச் சென்ற அந்த இளைஞர் அடுத்த நாள் பழுதுபார்த்துவிட்டு மீண்டும் வந்து கொடுக்கும்போது அந்த பெண்ணின் வீட்டில் 32 வயதுடைய வேறு ஒரு பெண் இருந்துள்ளார்.
அப்போது அந்த ஐபோனை வாங்கிப் பார்த்த பெண்கள், போனில் ஸ்கிரீன் டேமேஜாக இருப்பதாகக் குற்றம் சாட்டி அந்த இளைஞரிடம், 38 பவுண்டுகள் அல்லது 3 ஆயிரம் ரூபிள்ஸ் பணம் கேட்டிருக்கின்றனர். ஆனால் இளைஞர் தர மறுத்ததால், அவரைக் கட்டிபோட்டு இருவரும் தங்களிடம் இருந்த உடலுறவு உபகரணக் கருவிகளைப் பயன்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்து துன்புறுத்தியுள்ளனர்.
மேலும் இந்த பலாத்கார சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்துவிட்டு, பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். ஒருவழியாக பணம் தர சம்மதித்த அந்த இளைஞர், வீட்டுக்குச் சென்று பணம் எடுத்து வருவதாகக் கூறி, அந்த 2 பெண்களிடம் இருந்தும் தப்பியோடி வந்து போலீஸாரிடத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து அந்த பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
