‘திருமணமான 6 மாதத்தில்’.. ‘கணவனும் கர்ப்பிணி மனைவியும்’.. ‘எடுத்த சோக முடிவு’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Oct 07, 2019 05:32 PM

புதுச்சேரியில் திருமணமான 6 மாதத்தில் கணவனும், கர்ப்பிணி மனைவியும் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Pondicherry newlywed Husband preganant Wife commit suicide

புதுச்சேரியைச் சேர்ந்த சிவா - விஜயலட்சுமி தம்பதிக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. விஜயலட்சுமி கர்ப்பமாக இருந்த நிலையில் அவர்களுடைய வீட்டிலிருந்து இன்று திடீரென புகை வந்துள்ளது. இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கும், போலீஸாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது கணவன், மனைவி இருவரும் இறந்து கிடந்துள்ளனர். மேலும் சமையல் எரிவாயு திறக்கப்பட்டு வீடு முழுவதும் எரிவாயு பரவி இருந்துள்ளது. பின்னர் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரைப் பாய்ச்சி தீயை அணைத்துள்ளனர்.

கணவன், மனைவி இருவருக்கும் லேசான காயம் இருந்த நிலையில் விஜயலட்சுமியின் கழுத்தில் பெரிய துப்பட்டா ஒன்று சுற்றியிருந்துள்ளது. இன்று ஆயுத பூஜையை முன்னிட்டு இருவருக்கும் இடையே அவர்களுடைய பழச்சாறு கடைக்கு பூஜை போடுவதில் பிரச்சனை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் விஜயலட்சுமி அறைக்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கலாம், அதைப் பார்த்த சிவா அவரது உடலை கீழே இறக்கிவிட்டு சமையல் எரிவாயுவை திறந்துவிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது.

மன அழத்தம், மன உளைச்சல் உள்ளவர்கள் Sneha Suicide Prevention helpline – 044 -2464000 (24 hours), State suicide prevention helpline – 104 (24 hours), iCall Pychosocial helpline – 022-25521111 ( Mon – Sat, 8am – 10pm) போன்ற இலவச ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்புக் கொண்டு பேசினால் அதிலிருந்து வெளிவர ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

Tags : #PONDICHERRY #NEWLYWED #HUSBAND #PREGNANT #WIFE #SUICIDE #GAS #FAMILY #ISSUE